கடவுள் உன்னை நேசிக்கிறார்

வேதாகமம் கூறுகிறது, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

பிரச்சனை என்னவென்றால்…

நம் அனைவருமே தீய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லது தீய எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம். இததைத்தான் பாவம் என்று சொல்கிறோம், நம் பாவங்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றன.

வேதாகமம் கூறுகிறது: “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையை இழந்துபோனார்கள்.” கடவுள் பாவமற்றவர் , பரிசுத்தவானவர், நம் பாவங்கள் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறது. வேதாகமம் கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்”

இது நற்செய்தி 2000 ஆண்டுகளுக்கு முன்பு,

நம்முடைய பாவங்களுக்காக மரிக்க கடவுள் தம்முடைய ஒரே குமாரனை அனுப்பினார்.

இயேசு தேவனுடைய குமாரன். அவர் பாவமற்ற வாழ்வை வாழ்ந்து, நம்முடைய பாவங்களை கழுவும்படி சிலுவையில் அவருடைய உயிரை தியாகம் செய்தார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”

இயேசு மரித்தோரிலிருந்து எழும்பி, இப்பொழுது பரலோகத்தில் பிதாவோடு இருக்கிறார். அவர்கள் நமக்கு நித்திய ஜீவனின் வரத்தை தருகிறார்கள் – நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாக நாம் அவர்களை ஏற்றுக்கொண்டல் பரலோகத்தில் என்றென்றைக்கும் அவர்களோடே வாசம்பண்ணுவோம்.

அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்  ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

கடவுள் உங்களை அன்புடன் அழைக்கிறார், நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று அவர்  விரும்புகிறார். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்  “இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்கவும் உங்கள் வாழ்வின் இரட்சகராகவும், தேவனாகவும் இருக்கும்படி வேண்டுதல் செய்யலாம்.

நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்பினால், அவரை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவருக்காகவும் செய்யும்படி நீங்கள் இந்த ஜெபத்தை செய்யலாம்:

“கர்த்தராகிய இயேசுவே, நீர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன், என் பாவங்களுக்காக சிலுவையில் தம்முடைய ஜீவனை கொடுத்ததற்காக நன்றி. என் பாவங்களை மன்னித்து, நித்தியஜீவனை எனக்குத் தந்தருளும். உம்மை நான் என் வாழ்வின் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுகொள்கிறேன். நான் எப்போதும் உம்மையே சேவிக்க விரும்புகிறேன்.”

 

இன்றைக்கு நீங்கள் இந்த ஜெபத்தை ஜெபித்தீர்களா ?

ஆம்

 

உங்கள் பகுதியிலுள்ள ஒரு தேவாலயத்தில்  பங்கெடுக்க விரும்பினால், கீழே அழுத்தவும்.

ஒரு தேவாலயத்தைக் கண்டுகொள்